என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊழியர் பலி"
ஸ்ரீபெரும்புதூர்:
மேற்கு தாம்பரம் கேப் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வின் (58). தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் போன் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அலுவலகத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் செல்வின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார். விபத்தில் இறந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் செல்வினுக்கு ஜெயராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
பெருந்துறை:
பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் வெல்டிங் வேலைகள் செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது.
நேற்று இரவு இங்கு ஊழியர்கள் பணி செய்தனர். இரவு 10 மணிக்கு நிறுவனம் மூடப்பட்டது. ஊழியர்கள் வெளியேறினர்.
இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் அந்த நிறுவனத்தில் இருந்து புகை வெளியேறியது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
அவர்கள் அந்த நிறுவனத்தில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். அந்த நிறுவனத்தின் அலுவலக அறையிலும் தீப்பற்றி எரிந்தது.
அந்த அறை உள் பக்கமாக பூட்டி கிடந்தது. அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
அப்போது அங்கு ஒருவர் தீயில் கருகி பிணமாக கிடந்தார். அவர் அந்த நிறுவனத்தில் அச்சு தயாரிப்பாளராக பணிபுரிந்த ஆறுமுகம் (வயது 45) என்பது தெரியவந்தது.
அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் அவ்வப்போது தான் இங்கு வந்து அச்சு தயாரிப்பில் ஈடுபடுவார். நேற்று இங்கு வந்த அவர் எப்போது அலுவலக அறைக்குள் சென்றார்? என்பது தெரியவில்லை.
நிறுவனத்தை மற்ற ஊழியர்கள் பூட்டி சென்ற பின்னர் ஆறுமுகம் உள்ளே சென்றது எப்படி? என்பதும் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பதும் மர்மமாக உள்ளது.
தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் டி.எஸ்.பி. ராஜாகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர்கள் எட்வர்ட்ராஜ், ராம்பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
அவர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தினார்கள். அந்த நிறுவனத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் அங்கு நடந்தது என்ன? என்பது குறித்து விசாரணை துரிதப்படுத்துப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
பூந்தமல்லியை சேர்ந்தவர் முத்து (45). ஓட்டல் ஊழியர். இவர் பொன்னேரியில் உள்ள தனது அண்ணனை பார்க்க சென்றார். பொன்னேரி வரும்போது இங்குள்ள மூகாம்பிகை நகர் குட்டையில் மீன் பிடிப்பது முத்துவின் வழக்கம். இதற்காக வலையும் கொண்டு சென்றார்.
நேற்று மாலை மூகாம்பிகை நகர் குட்டையில் மீன் பிடிப்பதற்காக முத்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. குட்டையில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அவருடைய செருப்பும், உடைகளும் குட்டையின் அருகில் கிடந்தன. மீன்பிடிக்கும் வலையும் குட்டையில் விரிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தீயணைப்பு படையினர் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் குட்டையில் தேடிய போது முத்து நீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டனர். சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குட்டையில் மூழ்கி உயிர் இழந்த ஓட்டல் ஊழியர் முத்துவுக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார்.
நேற்று இரவு தனது நண்பர் நித்தியானந்தம் (25) என்பவருடன் திருவனந்தபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
வண்ணாரப்பேட்டை- காசிமேட்டுக்கும் இடையே சூரிய நாராயண ரோட்டில் வந்தபோது மாநகர பஸ்சை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த கோபி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த நித்தியானந்துக்கு கால் எலும்பு முறிந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விபத்தில் பலியான கோபிக்கு உடலில் காயம் எதுவும் இல்லை. தலையில் மட்டுமே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் ஹெல்மெட் அணியவில்லை. அணிந்திருந்தால் தலையில் அடிபட வாய்ப்பில்லை. அவர் உயிர் பிழைத்து இருப்பார். எனவே இரு சக்கர வாகனம் ஓட்டு பவர்களும், பின்னால் அமர்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தங்கள் இன்னுயிரை காத்து கொள்ள வேண்டும் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்